தமிழ் ஒலிம்பியாட் சார்பில் தமிழ் பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. தமிழ் மொழியில் மாணவர்களின் பேச்சு திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும் தமிழ் மொழியின் உச்சரிப்பை சரியாக பயன்படுத்தவும் தங்கு தடையின்றி பேசவும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்போட்டி நடத்தப்படுகிறது.
பேச்சுப் போட்டிக்கான நிலைகள்:
1) 1 – 5 வகுப்பு
2) 6 – 10 வகுப்பு
3) 11 – 12 வகுப்பு
தலைப்புகள்:
- தமிழும் தமிழர் மருத்துவமும்
- தமிழர் விவசாயம் காப்போம்
- பாரம்பரிய உணவுகள்
- பாரம்பரிய விளையாட்டுகள்
- நீரின்றி அமையாது உலகு
- மழைநீர் சேமிப்பு
- சுற்றுப்புற தூய்மை
- இயற்கை வளம் காப்போம்
- தொலைக்காட்சி – நன்மை தீமைகள்
- ஆன்லைன் விளையாட்டுகளும் விபரீதங்களும்
ஒழுங்கு மற்றும் விதிமுறைகள்:
- தமிழில் மட்டுமே பேச வேண்டும். பிற மொழி சொற்களைத் தவிர்த்தல் வேண்டும்.
- நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.
- பேச்சுப் போட்டியின் தொடக்கம் மற்றும் முடிவு நேர்த்தியானதாக இருத்தல் வேண்டும்.
- வார்த்தை உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும்.
- தடுமாற்றம் இல்லாமல் தன்னம்பிக்கையோடு பேச வேண்டும்.
- திருக்குறள், பழமொழிகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
- தலைப்பை சார்ந்ததாக பேச்சு இருத்தல் வேண்டும்.
- பேச்சினைக் காணொலியாகப் (Video) பதிவு செய்ய வேண்டும்.
- காணொலி படுக்கை [Landscape Mode] வாட்டில் இருக்க வேண்டும்.
- தமிழ் ஒலிம்பியாட் என்ற வார்த்தை பின்னணியில் இருக்க வேண்டும்.
- போட்டியாளர் தனது பெயர், வகுப்பு , பள்ளிப் பெயர் ஆகியவற்றைக் கூறிய பின் பேசத் தொடங்க வேண்டும்.
- மொழி, இனம், மதம், பண்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைச் சாடும் வகையில் பேசுதல் கூடாது.
- காணொலியில் தொடக்கம், இடையில் அல்லது இறுதியில் எந்தவித [EDIT/GRAPHICS] மாற்றமும் செய்யக் கூடாது.
- போட்டியாளர் பள்ளிச் சீருடை அல்லது பண்பாட்டு உடை அணியலாம்.
- ஒரு போட்டியாளர் ஒரு காணொலி மட்டுமே அனுப்ப வேண்டும்.
- மிகச் சிறந்த பேச்சாளர்களுக்கு தமிழ் ஒலிம்பியாட் சார்பில் பரிசு வழங்கப்படும்.
- நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மிகச் சிறந்த காணொலிகள் தமிழ் ஒலிம்பியாட் வலையொளியில் [You tube Channel] பதிவேற்றம் செய்யப்படும்.
- போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் தமிழ் ஒலிம்பியாட் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.