தமிழ் ஒலிம்பியாட் – ஓவியப் போட்டி
ஓவியம் என்பது ஏதேனும் ஒரு தோற்றத்தை ஒத்திருப்பது போன்று வரைவதாகும். ஒ – என்றால் ஒத்திருப்பது / ஒப்பாகுதல் எனப் பொருள். ஒன்றைப் பற்றியிருப்பது, ஒன்றை ஒத்திருப்பது, ஒன்றை பொருந்தியிருப்பதே ‘ஓவியம்’ என்று சொல்லப்படுகிறது.
மனிதன் குகைகளில் வாழ்ந்த கற்காலத்திலேயே ஓவியம் தீட்டத் தொடங்கி விட்டான். கண்ணால் கண்ட ஒரு காட்சியைத் தனது மனதில் பதிய வைத்துக் கொண்டு – அதனைப் பிறர் காணும் வகையில் பாறைகளில் எழுதிக் காட்டி ஓவியத்தைக் கலையாக்கினான்.
மனித வரலாற்றின் தொன்மையான கலை ஓவியம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் கருத்து தெரிவிப்பதற்காக மொழி தோன்றுவதற்கு முன்னர் ஓவியத்தை தான் பயன்படுத்தினர். தொன்மையான சரித்திர சின்னங்களில் குகை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. அதனால் கலைகளில் பழமையானது ஓவியம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஓவியத்தை புரிந்துகொள்வதற்கு மொழி தேவையில்லை. மொழி, இன, மத, தேச வேறுபாடற்ற கலை ஓவியமாகும்.
ஓவியங்களின் வகைகள்:
குகை ஓவியம்
சுவர் ஓவியம்
துணி ஓவியம்
ஓலைச்சுவடி ஓவியம்
செப்பேட்டு ஓவியம்
தந்த ஓவியம்
கண்ணாடி ஓவியம்
தாள் ஓவியம்
கருத்துப்பட ஓவியம்
நவீன ஓவியம்
மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் விதமாக தமிழ் ஒலிம்பியாட் சார்பில் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம்.
ஓவிய போட்டிக்கான விதிமுறைகள்:
- கொடுக்கப்படும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றினைக் கருப்பொருளாகக் கொண்டு ஓவியம் வரைய வேண்டும்.
- ஒரு படைப்பாளர் ஒரு ஓவியத்தை மட்டுமே வரைய வேண்டும்.
- ஓவியம் வரைவதற்கு பென்சில் மற்றும் கலர் பென்சிலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும்.
- ஓவியத்தின் கீழ்ப்பகுதியில் மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்றவற்றை எழுத வேண்டும்.
- சிறந்த ஓவியங்களுக்கு தமிழ் ஒலிம்பியாட் சார்பில் பரிசுகள் வழங்கப்படும்.
- ஓவியப் போட்டியில் பங்கு பெரும் அனைவருக்கும் தமிழ் ஒலிம்பியாட் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
- சேர்க்கைக்கான பதிவுக் கட்டணம்: ரூ. 250/-
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.10.2022