ஒலிம்பியாட் என்பது மாணவர்களின் கல்வி திறமையை மேம்படுத்த நடத்தப்படும் போட்டி தேர்வு ஆகும். இந்தத் தேர்வுகள் மாணவர்களின் அறிவைப் பற்றிய முழுமையான மதிப்பீட்டை வழங்குவதோடு, கல்வி மேம்பாட்டை நோக்கி அவர்களை ஊக்குவிக்கின்றன.
தமிழ் ஒலிம்பியாட் என்பது தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில் மாணவ / மாணவியர்களுக்காக இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில், தமிழ்நாடு திறந்தநிலை மற்றும் தொலைத்தூரக் கல்வி மையம் – சார்பில் நடத்தும் போட்டி தேர்வுகள் ஆகும். இதில் தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ / மாணவியர்கள் பங்கு பெறலாம். இதற்கான சேர்க்கைப் படிவம் www.tamilnaducouncil.ac.in / www.tamilolympiad.org என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ள மாணவ / மாணவியர்கள் சேர்க்கைப் படிவத்தை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தமிழ் ஒலிம்பியாட் போட்டி தேர்வில் பங்குபெற பதிவுக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
மேலும் விவரங்களுக்கு தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9444 00 3563
(i) 2024 – 2025 ஆண்டிற்கான தமிழ் ஒலிம்பியாட் போட்டி தேர்விற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் ஒலிம்பியாட் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.07.2024
(ii) தமிழ் ஒலிம்பியாட் போட்டி தேர்வுகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும். தமிழ் ஒலிம்பியாட் போட்டி தேர்வுகள் இணைய வழி வாயிலாகவோ அல்லது நேரடித்தேர்வுகளாகவோ நடத்தப்படும்.
(iii) தமிழ் ஒலிம்பியாட் போட்டி தேர்வில் பங்குபெறும் மாணவ / மாணவியர்கள் தங்களின் தமிழ் பாட புத்தகத்தில் உள்ள பாடப்பகுதியை நன்றாக படித்து தங்களை தயார்படுத்திக்கொள்ளவும்.