ஒலிம்பியாட் தேர்வு என்பது கல்விப் போட்டியை பிரபலப்படுத்தும் ஒரு கல்வி நிறுவனம் 

9444003563
tamilolympiadexams@gmail.com

திருக்குறள் போட்டித் தேர்வுகள்

தமிழ் ஒலிம்பியாட் – Tamil Olympiadதிருக்குறள் போட்டித் தேர்வுகள்

திருக்குறள்:

திருக்குறள், ஒரு தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையிலான 1330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. திருக்குறள், தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

திருக்குறள் என்ற சொல் “திரு” மற்றும் “குறள்” என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். “திரு” என்பது தமிழில் மரியாதையையும் மேன்மையையுங் குறிக்கும் ஒரு சொல். “குறள்” என்றால் குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட என்று பொருள். தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டு சுருங்கிக் “குறள் பாட்டு” என்றாகிப் பின்னர் “குறள்” என்றானது. அஃதாவது ” குறுகிய செய்யுள்” என்பதே “குறள்”. குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்” என்றும் அதன் உயர்வு கருதித் “திரு” என்ற அடைமொழியுடன் “திருக்குறள்” என்றும் பெயர் பெறுகிறது. முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாமடியில் மூன்று சீர்களுமுடைய ஒரு பாவகையைக் குறிக்கிறது. இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன.

 முதற் பால் – அறத்துப்பால்: ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் யோக தத்துவத்தைப் பற்றியும் கூறுவது (அதிகாரங்கள் 1 – 38)

 இரண்டாம் பால் – பொருட்பால்: ஒருவர் தன் சமூக வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறங்களை, அதாவது சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் நிருவாகம் ஆகிய விழுமியங்களைப் பற்றிக் கூறுவது. (அதிகாரங்கள் 39 – 108)

 மூன்றாம் பால் – இன்பத்துப்பால்: ஒருவர் தன் அகவாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அறங்களைப் பற்றிக் கூறுவது. (அதிகாரங்கள் 109 – 133)

இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், “உலகப் பொதுமறை”, “பொய்யாமொழி”, “வாயுறை வாழ்த்து”, “முப்பால்”, “உத்தரவேதம்”, “தெய்வநூல்” எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா செய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இவற்றோடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையோடு கூடாமை, கள்ளாமை,மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக் கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது.

நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812 – ஆம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலகக் திருக்குறள் திகழ்கிறது.

ஆங்கிலேய ஆட்சியின் போது திருக்குறள் முதன்முதலாகப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆயினும் தேர்ந்தெடுக்கப்பட்ட வெறும் 275 குறட்பாக்கள் மட்டுமே மூன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிச் சிறார்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின்னரும் பல ஆண்டுகளாக திருக்குறளைப் பள்ளிகளில் கட்டாயப் படமாக்கும் முயற்சிகள் பலனளிக்காமல் இருந்து வந்தன. 2016 – ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி சென்னை உய்ரநீதிமன்றம் “அறம் பிறழாத குடிமக்களைக் கொண்டதாக இந்நாட்டினை ஆக்கவேண்டும்” என்று பணித்து 2017 – 2018 கல்வியாண்டு முதல் குறளின் முதல் இரண்டு பிரிவுகளில் உள்ள 108 அதிகாரங்களில் காணப்படும் 1080 குறட்பாக்களையும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கட்டாயப் படமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்ற உத்தரவினைப் பிறப்பித்தது.

திருக்குறள் போட்டித் தேர்வுகள்:

 தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்வி மையம் சார்பில் திருக்குறள் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்.
 இப்போட்டித்தேர்வுகள் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும்.
 இதற்கான அறிவிப்புகள் இணைய வழி வாயிலாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
 திருக்குறள் போட்டித் தேர்வுகள் குறித்து மேலும் தகவல்களுக்கு தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9444 00 3563

Post your comments here

Your email address will not be published. Required fields are marked *